எல்லை மீறி கேள்வி கேட்ட நபர்… அசால்ட்டாக டீல் பண்ணிய மாளவிகா மோகனன்… VIRAL TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாளவிகா மோகனன் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | “சில கதாபாத்திரங்கள் நம் மனதில்…. “ ‘கார்கி’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சூர்யா

மாளவிகா மோகனன்

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார்.  ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

#AskMalavika

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்களிடம் தொடர்ந்து இணைப்பில் இருந்துவரும் மாளவிகா அடிக்கடி ரசிகர்களோடு உரையாடலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இணையவாசியின் சர்ச்சை கேள்வி

இந்நிலையில் அவர் நடித்துள்ள பிரபல ராப் இசைக் கலைஞர் பாட்ஷாவின் இசையில் உருவாகியுள்ள ஆல்பமான ‘TAUBA’ தற்போது வெளியாகியுள்ளது. அதையடுத்து ரசிகர்களோடு உரையாடும் விதமாக “#ASKMALAVIKA” என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு நபர் அவரிடம் “உங்களின் கடைசி பிகினி புகைப்படத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்” என கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாளவிகா வெறும் பிகினி ஆடைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்தார். மாளவிகா மோகனின் இந்த ட்வீட் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

Also Read | மணிகண்டன் கதையில் யோகி பாபு நடிக்கும் ‘பன்னி குட்டி’… லைகா வெளியிட்ட ரிலீஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika mohanan reply to fan asking bikini pic

People looking for online information on Malavika Mohanan, Malavika mohanan reply to fan questions will find this news story useful.