குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. கூட யாரெல்லாம் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா! எப்போ? எதுல?

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   இந்த புகைப்படங்களில் மாளவிகா மோகனன் குடும்ப நண்பர்களுடன் சகோதரர் ஆதித்ய மோகனன், தந்தை மோகனன், தாயார் பீனா ஆகியோர் உடன் உள்ளனர்.

இது தொடர்பான பதிவில், "அன்புள்ள மக்கள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்! ♥️ 🌾🌺🌼 எனது சிறந்த நண்பர்களுடன் சேர்ந்து பூக்களால் 'பூக்களம்' செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தேன். நண்பர்களுடன் சத்யா விருந்து உண்டு மகிழ்ந்தோம்.

மேலும் இந்த ஆண்டு மிகச்சிறந்த கேரள ‘கசவு’ சேலையை மிஸ் செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்காக வண்ணமயமான தாவணிப் புடவை அணிந்துள்ளேன்! நீங்கள் அதை விரும்புகிறீர்களா?" என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | ONAM: கேரள ஸ்டைலில் உதயநிதி & வடிவேலுக்கு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Onam Celebration with Friends and family members

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Onam Celebration, Onam will find this news story useful.