நவராத்திரி திருவிழா ஸ்பெஷல்.. லெஹேங்கா உடையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி அசத்திய மாளவிகா மோகனன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |
Advertising
>
Advertising

நடிகை மாளவிகா மோகனின் நவராத்திரி ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றன.

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  தற்போது பெயரிடப்படாத மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரபல போட்டோ கிராபர் தி ஹவுஸ் ஆஃப் பிக்ஸல்ஸ் வைஷ்ணவ் பிரவினுடன் ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   இந்த புகைப்படங்களில் மாளவிகா மோகனன் Lehenga Choli உடையில் தோன்றியுள்ளார்.

இது தொடர்பான பதிவில், "9 பகல் & இரவு திருவிழா.. வழிபாடு,ஒளி, நடனம், சுவையான உணவு‌கள்.. அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!" என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

Also Read | 'நானே வருவேன்' படத்தின் முதல் நாள் வசூல்.. தயாரிப்பாளர் தாணு சொன்ன சூப்பர் EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Navaratri Festival Photoshoot Pictures in Lehenga Choli

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan in Lehenga Choli, Malavika Mohanan Navaratri Festival Photoshoot will find this news story useful.