சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம், நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருந்தது.

அடடே..! "பாக்குற நமக்கே அள்ளு விடுதே..".. பிரபல நடிகையின் ஸ்கை டைவிங் சாகசம்.. 'வீடியோ'
இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருந்த நிலையில், தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
மலையாள திரைப்படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த 'பேட்ட' திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பத்திக்கும் போட்டோஷூட்..
இதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் மாளவிகா. அது மட்டுமில்லாமல், அவர் எப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டாலும், அது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பற்றிக் கொண்டு, அதிகம் வைரலாகவும் செய்யும். பேட்ட படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மாளவிகா நடித்திருந்த நிலையில், அவரின் பிரபலம் இன்னும் பல மடங்கு உயர்ந்தது.
ஹிந்தி திரைப்படத்தில் மாளவிகா
இதனையடுத்து, தனுஷுடன் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அடுத்ததாக ஹிந்தியில் 'யுத்ரா' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக, தீபிகா படுகோனே நடித்திருந்த 'கெஹ்ரையான்' திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் சித்தாந்த் நடித்திருந்தார்.
கையில் பேப்பருடன் இன்ஸ்டா ஸ்டோரி
'யுத்ரா' தவிர, வேறு சில ஹிந்தி படங்களிலும், சித்தாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், 'யுத்ரா' திரைப்படம் குறித்து, நடிகை மாளவிகா மோகனன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கையில் பேப்பருடன் மாளவிகா படித்துக் கொண்டிருக்க, "இந்த படம் வேகமாக முடிய வேண்டும் என நான் நினைக்கிறன். ஏனென்றால், அப்போது தான் உங்களை (ரசிகர்களை) வேகமாக இந்த திரைப்படம் வந்தடையும். ஆனால், இதன் படப்பிடிப்பு வேகமாக முடிய வேண்டாம் என்றும் நான் விரும்புகிறேன். அப்படி நினைப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்ரா திரைப்படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்பதால், ரசிகர்கள் விரைவில் பார்க்க வேண்டும் என்பதற்கும், சிறப்பான படக்குழு என்பதால் தான் ஷூட்டிங் முடிய வேண்டாம் என்றும் மாளவிகா கருதி, குழப்பத்துடன் தன்னுடைய ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோகன் - குஷ்பூ இணையும் 'ஹரா' .. வெளியான அசத்தல் 'அப்டேட்'.. ஜாலி மோடில் 90S கிட்ஸ்..