மாலத்தீவில் மாளவிகா மோகனன்.. பிரேமம் ஒளிப்பதிவாளருடன் செம FUN.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவிற்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "என்ன உங்க பிரச்சனை?..".. 'அந்நியன்' விக்ரமன் Vs 'மன்மதன்' ஆயிஷா bigg boss 6 tamil

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்'தங்கலான்'படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேமம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் சந்திரனுடன் இருக்கும் புகைப்படம் & வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் "நீங்கள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பில் இருக்கும் போது உங்கள் ஒளிப்பதிவாளரே ஸ்கூட்டர் டிரைவராகவும், சில சமயங்களில் உங்கள் உதவியாளராகவும் (திறமை இல்லை என்றாலும்) பணிபுரிவார்"  என மாளவிகா மோகனன் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Also Read | டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan in Maldives for shooting With Anend C Chandran

People looking for online information on Anend C Chandran, Malavika Mohanan, Maldives will find this news story useful.