ஒளிப்பதிவாளராக மாறிய மாளவிகா மோகனன்.. விளையாட்டு சாமானாக மாறிய கேமரா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளாவை சார்ந்த மாளவிகா மோகனன்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார்.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் போர்க் காட்சிகள்.. இந்த ஊர்ல தான் எடுத்தாங்களாம்! மணிரத்னம் சொன்ன தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.  கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி & மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், இத்தாலி & மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின.

மாளவிகா மோகனன், இந்தியா திரும்பியதும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தடோபா காட்டில் சஃபாரி செய்து, காட்டு விலங்குகளை புகைப்படங்கள் எடுத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அந்த போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. நடிகை மாளவிகா மோகனன் புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.

இந்நிலையில் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   அந்த புகைப்படங்களுக்கு "ஒளிப்பதிவாளர் தந்தையுடன் வளர்ந்ததால் படப்பிடிப்பு தளத்தில் ARRI Alexa கேமரா கூட விளையாட்டு பொம்மையாகி விடும்" என தலைப்பிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் தபான் துசர் பாசு ISC ன் கேமரா உடன் இந்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் எடுத்துள்ளார்.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்துள்ளனர். கடந்த (24.06.2022) அன்று இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் த்ரிஷா போஸ்டர்.. வந்தியத்தேவன் கார்த்தி போட்ட வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Handling Arri Alexa Camera at Shooting Spot

People looking for online information on Arri Alexa Camera, Malavika Mohanan, Malavika Mohanan Handling Arri Alexa Camera, Shooting Spot will find this news story useful.