தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் கீர்த்தி சுரேஷ் & மாளவிகா மோகனன்.
பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.
தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.
அதே போல கேரளாவை சார்ந்த மாளவிகா மோகனன், ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார். கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் மாறன் படத்தில் நடித்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் & மாளவிகா மோகனனுக்கு முக்கிய இடமுண்டு. இவர்களின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கீர்த்தி சுரேஷ் & மாளவிகா மோகனன் நெருங்கிய தோழிகள் ஆவர். சென்னையில் தனக்கு பிடித்த இடம் கீர்த்தி சுரேஷின் வீடு தான் என மாளவிகா மோகனன் ஒரு சில வாரங்களுக்கு முன் டிவிட்டரில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்ப்டங்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் "Oolalaaaa 🔥🔥🔥" என கமெண்ட் செய்துள்ளார். மேலும் மற்றொரு மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் "🔥🔥🔥" என கமெண்ட் செய்துள்ளார்.