"SEXY-னா 'ஓ சொல்றியா' சமந்தா தான்".. - மனம் திறந்த 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாறன் படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகை மாளவிகா மோகனன் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

மாளவிகா மோகனன், தற்போது தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியாகிறது.திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது.

இதற்காக Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக PAN INDIA< PAN WORLD படங்கள் குறித்தும், தனுஷ் உடன் நடித்த அனுபவம், தன்னுடைய நடிப்பு, அடுத்து நடிக்க போகும் படங்கள் குறித்து பேசினார்.

இதில் செக்ஸி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு மனதில் தோன்றும் விஷயம் என்ன? என்ற கேள்விக்கு சமந்தா என பதில் அளித்தார். அதற்கு காரணமாக புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ooo antava mava' பாடலில் சமந்தா செக்ஸியாக இருந்ததாக மாளவிகா மோகனன் கூறினார்.

"SEXY-னா 'ஓ சொல்றியா' சமந்தா தான்".. - மனம் திறந்த 'மாஸ்டர்' மாளவிகா மோகனன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan about Samantha Oo Antava Mawa

People looking for online information on Malavika Mohanan, Oo Antava Mawa, Samantha will find this news story useful.