BREAKING: விஜய் ஆண்டனி - மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படம்! இந்தியாவின் அழகான ஊர்ல ஷூட்டிங்கா? செம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் விஜய் ஆண்டனி.  கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘கோடியில் ஒருவன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி  " கொலை", பிச்சைக்காரன்-2 " மழை பிடிக்காத மனிதன் " போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் -2 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தற்போது நடந்து வருகிறது. 

Advertising
>
Advertising

Infinity film ventures இந்த படத்தை தயாரிக்கிறது. Infiniti Film Ventures தயாரிப்பாளர்கள் கமல் போரா, G.தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர், இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியவேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கன்னட நடிகர்கள் தனஞ்செயா, பிரிதிவி அம்பார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக சிலநாட்களுக்கு முன் தகவல்கள் தெரிவித்தன.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடுவே எடுத்த BTS குரூப் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் கோவா படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு குஜராத் அருகே உள்ள யூனியன் பிரதேசமான டையூ டாமனுக்கு செல்கின்றன எனவும், அங்கு நாளை முதல் (17.12.2021) படப்பிடிப்பு துவங்க உள்ளது எனவும், இந்த படப்பிடிப்பு டிசம்பர் 22 வரை டையூ டாமனில் நடக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் விஜய் மில்டன் ஆட்டோகிராப், காதல், போஸ், சாமுராய், வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள படங்களை தொடர்ந்து ,நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில்இயக்குநர் விஜய் மில்டன் 'பைராகி' படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில்  விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி கொண்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Malai pidikatha manithan team travelling to Daman Diu

People looking for online information on சலீம் -2, மழை பிடிக்காத மனிதன், விஜயகாந்த், விஜய் ஆண்டனி, Salim, Vijay Anthony, Vijay Milton, Vijayakanth will find this news story useful.