நடிகர் கமல் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று நடிகர் கமல் தனது கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். கூட்டணி குறித்து பேசிய அவர், ''கூட்டணி என்ற பெயரில் கொத்தடிமைகளாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சியுமே தனித்த பெரும்பாண்மையுடன் நிற்கவே விரும்பும். அதற்கு மக்கள் நீதி மய்யம் விதிவிலக்கல்ல'' என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிய போது, ''ரோம் எரிந்து கொண்டிருக்கும் போது ஃபிடல் வாசிக்க கூடாது'' என்ற பழமொழியையும் மேற்கோள் காட்டி பேசினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தைவிட, அவரது ஆரோக்கியம்தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசின் மீது அவருக்கிருந்த விமர்சங்களையும் பளீச்சென்று முன்வைத்தார் கமல்.
இதுகுறித்த முழு வீடியோ தொகுப்பு இதோ.
https://youtu.be/9-2WWoVFUJY