ஹிஜாப் விவகாரம்: தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன் பரபர டிவீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்ய நிறுவனருமான கமல்ஹாசன் கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக டிவீட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

"BEAST", "தளபதி66" படங்களுக்கு பின் விஜய் நடிக்க போகும் இரண்டு படங்கள்.. FANS-க்கு டபுள் ட்ரீட்டா?

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரிக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்கு  தொடுத்து புகாரளித்தனர்.

இந்த ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக வலது சாரி மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்கும் போது காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலது சாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் நீலநிறத் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராக சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தையும் மாணவிகளுக்கு ஆதரவாக சில மாணவர்கள் ஜெய்பீம்  முழக்கத்தையும் எழுப்பியது சமீபத்தில் விவாதமானது.

ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான சீருடையுடன் தான் வர வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களும் யூனிபார்ம் மட்டுமே போட வேண்டும் வேறு உடைகளை அணிய கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதனால் போராட்டத்தை தணிக்க கர்நாடக அரசு 3 நாள்களுக்கு (பிப். 9 முதல் 11) அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் டிவிட்டரில் டிவீட் செய்துள்ளார். அதில், "கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது". என குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20 புதிய படம்! ஷூட்டிங் தமிழ் நாட்டில் எங்க? எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Makkal Needhi Maiam Kamal Haasan worried about karnataka hijab issue

People looking for online information on கமல்ஹாசன், மக்கள் நீதி மய்ய, ஹிஜாப் விவகாரம், Kamal Haasan, Karnataka hijab issue, Makkal Needhi Maiam will find this news story useful.