கவின் நடிக்கும் லிப்ட் பட வினியோகஸ்தர் - தயாரிப்பாளருக்கு இடையே என்ன பிரச்சினை? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னரும் கூட அவருக்கு சமூக ஊடகங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார். தற்போது நடிகர் கவின் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா நடித்துள்ளார். இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. 

திரையரங்க வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது அதில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. 

Ekaa Entertainment நிறுவனத்தின் தமிழ் திரைப்படமான “LIFT”-இன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரனின் (Libra Productions) நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் 2021-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதை அடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்தரசேகரனின் (Libra Productions) நடந்து கொள்ளாததால், எங்களது Ekaa Entertainment நிறுவனத்திற்கும், Libra Productions தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரனிற்கும் இடையே செய்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து Ekaa Entertainment நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரான திரு திலிப் குமார் சென்னை காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரன் (Libra Productions) மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரனிடம், LIFT தமிழ் திரைப்படத்திற்கு சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரன்(Libra Productions)-னிடம் LIFT தமிழ் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்திற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

LIFT தமிழ் திரைப்படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ செய்திகளும் Ekaa Entertainment நிறுவனத்தினால் மட்டுமே ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளருக்கும் மற்றும் ஊடகத்திற்க்கும் தெரிவிக்கப்படும். என அந்த அறிக்கையில் தயாரிப்பு தரப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான சில மணித்துளிகளில் வினியோகஸ்தர் தரப்பிலும் ஒரு அறிக்கை வந்துள்ளது.

அதில், Ekaa Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள “லிப்ட்” திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ான்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது,

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தியுள்ளோம், மீதி 50% தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்தவேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,

கொரோனா இரண்டாம் அலைக்குபின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை, இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம் சங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் "லிப்ட்" பட தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது "லிப்ட்" பட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்சன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துகொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார்,

"லிப்ட்" படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தி கொள்கிறோம்.

என லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ’என்ன மயிலு’ பாடல் சிவகார்த்திகேயன் குரலில் வெளிவந்து ஹிட்டடித்தது. குறிப்பிடத்தக்கது. பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags : Kavin

தொடர்புடைய இணைப்புகள்

MAKERS OF KAVIN'S 'LIFT' CLARIFY THIS IMPORTANT ISSUE

People looking for online information on Kavin will find this news story useful.