"15 லட்சம் கெடச்சா எடுத்துட்டு வந்துடுங்க, MALDIVES போயிடுவோம் 😂".. விக்ரமன்கிட்ட ஜாலியா சொன்ன MAKAPA

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீங்க பண்றதே Cringe மாதிரி தான் இருக்கு".. வெளிப்படையா மைனாவிடம் போட்டுடைத்த மகேஸ்வரி!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த், பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தனர். இதில் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இரண்டாவது இடமும் பிடித்திருந்தவர்.

அவர்களும் போட்டியாளர்கள் இடையே கலகலப்பாக நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். Finale வும் நெருங்கி வருவதால் ஒரு போட்டியாளர் வெளியே கிளம்ப பணப்பெட்டி ஒன்று கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனிடையே, உள்ளே வந்த மாகாபா, "15 லட்ச ரூபா கெடச்சா எடுத்துட்டு ஓடிரு" என மைனா நந்தினியிடம் கூறுகிறார்.

அதே போல, அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோரிடமும் பேசும் மாகாபா ஆனந்த், "15 லட்சம் ரூபா கெடச்சா எடுத்துட்டு வந்துடுங்க. நாம எல்லாம் Maldives போவோம்" என ஜாலியாகவும் அவர் தெரிவிக்கிறார். ரியாலிட்டி ஷோக்களிலும் இது போன்று மாகாபா ஆனந்த் கலகலப்பாக இருக்கும் நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலும் அவரது என்ட்ரி அதிக உற்சாகத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read |பிக் பாஸ் வீட்டில்.. விக்ரமன்-ஐ தொடர்ந்து.. "தமிழ்நாடு" என்ற வார்த்தையை சொன்ன அசிம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Makapa Anandh fun conversation with vikraman and amudhavanan

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Makapa Anandh, Priyanka Deshpande, Vikraman will find this news story useful.