தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Also Read | தனா-வ இப்படியா Bigg Boss கூப்பிட்டாரு?.. வேகமா ஓடிய தனலட்சுமி.. அவரு சொன்னா கரெக்டா தான் இருக்கும்
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக பிரியங்கா மற்றும் மாகாபா ஆகியோர், ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் உரையாடவும் செய்திருந்தனர். அந்த சமயத்தில், விக்ரமனின் "அறம் வெல்லும்" என்று வாசகத்தை குறிப்பிட்டு பிரியங்கா பேச, "அப்போ நீங்க வெல்ல மாட்டீங்க" என மாகாபா ஆனந்த் ஜாலியாக விக்ரமனிடம் கேட்கிறார். இதனைக் கேட்டதும் அனைவரும் சிரிக்கவும் தொடங்கி விட்டனர்.
தொடர்ந்து பேசும் மாகாபா, பிக் பாஸ் 4 ஆவது சீசனில் நடந்ததை குறிப்பிட்டு, "போன சீசன்ல அன்பு தான் ஜெயிக்கும்ன்னு சொன்னீங்க. ஆனா ஆரி தான் ஜெயிச்சாரு. பொய் தானே சொல்லி இருக்கீங்க" என கேட்கிறார். அப்போது பேசும் பிரியங்கா, "போன சீசன் என்னோட சீசன். அதுக்கு முன்னாடி சீசன்ல தான் இது நடந்துச்சு" என கூறவே, "உன் சீசன் எல்லாம் நான் பாக்கவே இல்ல" என்றும் மாகாபா கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, விக்ரமனிடம் பேசி இருந்த மாகாபா ஆனந்த், 15 லட்சம் கிடைத்தால் எடுத்து விட்டு வருமாறும், Maldives சுற்றுலா போவோம் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார். அதே போல, தனது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரின் தீவிர Fans என்றும் மாகாபா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | ரஞ்சிதமே விஜய் ஸ்டைலில் Flying kiss.. "விக்ரமன் கொடுத்ததும் மைனாவோட ரியாக்ஷன பாக்கணுமே"