தற்போதைய ஊரடங்கின் போது தமிழக அரசு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் சின்னத்திரை படப்பிடிப்புகள் அதிகபட்சம் 60 பேர்களை கொண்டு நடத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது குறித்து சின்னத்திரை நடிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சன் டிவியின் 'தெய்வமகள்' சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல தொகுப்பாளர் நட்சத்திரா மற்றும் 'நாயகி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்நந்துள்ளார். அதில், மீண்டும் சன்டிவி சீரியலில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஃபோட்டோவவில் கிருஷ்ணாவுடன் நட்சத்திரா 'தெய்வமகள்' சீரியல் பிரபலங்கள் சிலரும் பங்கு பெற்றுள்ளனர். இதனையடுத்து 'நாயகி' கதையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.