பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான மைனா நந்தினிக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியை அவரது கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். திரையுலகை சேர்ந்தவர்களும், நடிகையின் நண்பர்களும் சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தினர்.'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து 'கலக்கப் போவது யாரு', அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கிருவர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரை குழந்தையின் எந்த புகைப்படத்தையும் அவரும், அவரது கணவரும் வெளியிட வில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவரது கணவர் யோகேஷ் குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குழந்தையை குறும்பா என்று செல்லமாக அழைத்து, சீக்கிரமே மகனின் புகைப்படத்தை வெளியிட போவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.