தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
Also Read | ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் லாரன்ஸ் பற்றி SJ சூர்யா வைரல் பதிவு! தெறி அப்டேட்ஸ்
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதனிடையே, முந்தைய போட்டியாளர்கள் ஆரம்பத்தில் சற்று கலகலப்பாக இருந்தாலும் மீண்டும் வந்துள்ள போட்டியாளர்கள் மத்தியில் சில வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது. முட்டையின் பெயரில் மகேஸ்வரி மற்றும் மணிகண்டா ஆகியோருக்கு இடையே கடும் சண்டை வெடித்திருந்தது. கடைசி வாரத்தில் மிகவும் பாசிட்டிவ்வாக போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பு நடந்த சம்பவங்கள் அடிப்படையில் சில பிரச்சனைகளும் தற்போது வெடித்து வருகிறது.
இதற்கு மத்தியில் மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரிஆகியோரிடையே ரச்சிதா பெயரில் வாக்குவாதம் ஒன்று உருவாகி உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, ரச்சிதா பொம்மை ஒன்றை டால் டாஸ்க்கின் போது எடுத்ததாக தெரிகிறது. இது பற்றி மைனாவிடம் பேசும் மகேஸ்வரி, "அவங்க பொம்மை எடுத்துட்டு போனதை Cringeன்னு சொல்றீங்கல்ல, இப்ப நீங்க பண்றதே Cringe மாதிரி தான் இருக்கு" என கூறுகிறார்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் மைனா நந்தினி, தனது மகனுக்காக பொம்மையை எடுத்து வைத்துள்ளதாகவும் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மகேஸ்வரியிடம் தெரிவிக்கிறார். இதன் பின்னர் பேசும் மகேஸ்வரி, "மத்தவங்க எடுத்துட்டு போனா பாத்தீங்களா, அது எப்படி எடுத்துட்டு போனாங்கன்னு சொல்றீங்க. உங்களுக்குன்னு வர்றப்போ அது Emotion-ன்னு சொல்றீங்க, அதான் கேட்டேன்" என தெரிவிக்கிறார்.
இப்படியாக அடுத்தடுத்து மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகியோரிடையே சில விவாதங்களும் அரங்கேறி இருந்தது. ஜாலியாக போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் சில சண்டைகளும் நடுவே அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read | "ஒன்னும் கிழிக்க முடியல.. அதுனால அனுப்பிட்டாங்க".. மணிகண்டா vs மகேஷ்வரி.. biggbosss