தசரா படத்தினை பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார்.
நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தில் நானி & கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.
தசரா திரைப்படம், நேற்று 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் கதாநாயகன் நானி & கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐத்ராபாத் நகரில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது டிவிட்டர் பக்கத்தில் தசரா படத்தினை பார்த்த பிறகு ட்வீட் செய்துள்ளார். அதில், "தசரா படத்தினை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். படம் பார்த்து மிரண்டு போனேன். Stunning Cinema" என ட்வீட் செய்துள்ளார்.