BOX OFFICE-ல் பட்டைய கிளப்பிய மகேஷ்பாபு படம்.. முதல் நாள் வசூல் மட்டும் இம்புட்டா? அம்மாடியோவ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படம் நேற்று (12.05.2022) முதல் தியேட்டரில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் நடிகர்!.. அஜித்துடன் திடீர் சந்திப்பு.. செம வைரல் ஃபோட்டோ

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குனராகவும் பணிபுரிந்தனர்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 'சர்க்காரு வாரி பாட்டா', படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக  ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படம் AP, TS இல் முதல் நாளில் 36.89 கோடி (SHARE) வசூல் செய்துள்ளது. இது பெரிய சாதனையாகும். நிஜாம் பகுதியில் 12.24 கோடியும், சீடெட் - 4.7 Cr, UA பகுதி - 3.73 Cr, கிழக்கு கோதாவரி - 3.25 கோடி, மேற்கு கோதாவரி - 3 Cr, குண்டூர் - 5.83 கோடி, கிருஷ்ணா - 2.58 கோடி, நெல்லூர் - 1.56 கோடி என மொத்த Share : 36.89 Cr ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை வரை பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மகேஷ் பாபு நடிப்பில் இப்படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

BOX OFFICE-ல் பட்டைய கிளப்பிய மகேஷ்பாபு படம்.. முதல் நாள் வசூல் மட்டும் இம்புட்டா? அம்மாடியோவ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Sarkaru Vaari Paata Box Office Collection Day 1

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Sarkaru Vaari Paata, Sarkaru Vaari Paata Movie Box Office Collection will find this news story useful.