மகேஷ் பாபு - பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகும் SSMB28 படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போ? எங்க?

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின்  பிளாக்பஸ்டர் கூட்டணி #SSMB28 படத்துக்காக மீண்டும் இணைகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வித்தியாசமான கான்செப்டுடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் இந்த படத்தில், மகேஷ் பாபு அட்டகாசமான மாஸ் லுக்கில் தோன்றுவார். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.

திரைப்பட ஆர்வலர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டனர். #SSMB28 ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் 28வது படத்திற்கு 28ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, மகேஷ் பாபுவின் இண்டஸ்ட்ரி ஹிட் போக்கிரியும் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 28 அன்று வெளியானது. இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் ஒரு சிறப்பு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பான வேகத்தில் நடந்து வருகின்றன. எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கும் ஸ்கிரிப்டை திரிவிக்ரம் உருவாக்கி வருகிறார்.

#SSMB28 ஐ தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்வார், அதே நேரத்தில் கலை இயக்குனர் ஏஎஸ் பிரகாஷ், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரமின் முந்தைய கூட்டணிகளான அத்தாடு மற்றும் கலேஜா ஆகியவை இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றன, மேலும் #SSMB28 குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளன. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்களை குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Also Read | தோழிகளுடன் பிரான்ஸ்க்கு டூர் சென்ற நடிகை ஆண்ட்ரியா.. அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Pooja Hegde SSMB 28 Release Date Announced

People looking for online information on Mahesh Babu, Pooja Hegde, SSMB 28, SSMB 28 Release Updates will find this news story useful.