திருமண நாளில் மகேஷ் பாபு குறித்து பதிவிட்ட நம்ரதா.. என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு குறித்து அவருடைய மனைவியின் பதிவு வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Boy Friend -ஐ Tag செய்து நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்த வைரல் மீம்😍.. அதுக்கு அவர் கொடுத்த REPLY!

தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் #ssmb28 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது‌.

Images are subject to © copyright to their respective owners.

நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 81 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மகேஷ் பாபு மனைவி நம்ரதா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "18 வது திருமண நாளை கொண்டாடுகிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த மிகவும் சிறந்த முடிவு இது தான். இனிய திருமண நாள் வாழ்த்துகள் MB"  என பதிவிட்டுள்ளார். மேலும் மகேஷ் பாபு உடனான இதுவரை காணாத போட்டோவையும் பகிர்ந்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகை நம்ரதாவை மகேஷ் பாபு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் கிருஷ்ணா என்ற ஒரு மகனும், சித்தாரா என்ற ஒரு மகளும் உள்ளனர். வம்சி படத்தில் மகேஷ் பாபு & நம்ரதா இணைந்து நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Also Read | கவின் நடித்த DADA.. ஸ்பெஷல் ஷோ படம் பார்க்க வந்த H. வினோத்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Namrata shirodkar wedding anniversary

People looking for online information on Mahesh Babu, Mahesh Babu wedding anniversary, Namrata Shirodkar will find this news story useful.