அதிர்ச்சி! மகேஷ் பாபுவின் தாயார் மரணம்.!! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி உடல்நலக் குறைவால் காலமானார்.

Advertising
>
Advertising

Also Read | Coffee With Kadhal : "சுந்தர்.சி-யின் நீண்ட நாள் ஆசை இதுவா?".. படவிழாவில் அவரே போட்டுடைத்த விஷயம்.!

இந்த செய்தி டோலிவுட் திரையுலகில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் பாபுவின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்று கூறப்படுகிறது. மகேஷ் பாபுவின் தாயாரும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திராதேவி 70 வயதில் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். 

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் இந்திரா தேவியின் உடல் வைக்கப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவியின் மறைவுச் செய்தி கேட்டு, சினிமா உலக நட்சத்திரங்கள் அனைவரும் மகேஷ் பாபு வீட்டிற்கு வரத் தொடங்கி உள்ளனர். இந்திரா தேவியின் மரணம் குறித்து அரசியல்வாதி சதீஷ் ரெட்டி தனது ட்விட்டரில், ”சூப்பர் ஸ்டார் மகேஷ் காருவின் தாயார் இந்திராதேவி காலமானார்! அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி. #RIPIndiraDeviGaru.” என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ""திருமதி இந்திரா தேவியின் அகால மறைவு செய்தி கேட்டு வருத்தமளிக்கிறது. அன்னையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சகோதரர் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சிரஞ்சீவி கூறியுள்ளார்.

மேலும் மகேஷ் பாபுவின் ரசிகர்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேஷ் பாபுவுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபுவும் இந்த ஆண்டு காலமானார். இப்போது அவரது தாயாரும் காலமாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, இந்த சோக நேரத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read | PS1: 'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க.. தஞ்சாவூர் வரும் பிரபல நடிகர்! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu mother Ghattamaneni Indira Devi passes away

People looking for online information on Ghattamaneni Indira Devi passes away, Mahesh Babu, Mahesh Babu Mother Passed away will find this news story useful.