SVP FROM MAY12: “நானும் ராஜமௌலியும் சேரும் படம்… ”… மகேஷ் பாபு கொடுத்த செம்ம EXCITING தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படம் நாளை (மே 12) ஆம் தேதி ரிலீஸாகிறது.

Advertising
>
Advertising

Also Read | ”நாம வந்தததே இதுக்காக தானே…?” - இயக்குநர் அருண் ராஜா காமராஜ் Exclusive பேட்டி! video

சர்காரு வாரிபாட்டா..

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபாட்டா படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் 12 (நாளை) ஆம் தேதியில் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் மகேஷ் பாபு கூட்டணியில் ஏற்கனவே உருவான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சர்க்காரு வாரி பாட்டா-வின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது பற்றி சொன்ன கருத்து வைரலாகி சலசலப்பை உருவாக்கியது. அதையடுத்து இப்போது மகேஷ் பாபு தன் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்தி படத்தில் நடிப்பது…

அவரது இந்தி திரைப்பட அறிமுகம் பற்றி கேட்டபோது, மகேஷ்பாபு வழக்கமான தனது நகைச்சுவையான ஸ்டைலில் “ஹிந்தியில் வெளியாகும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதையே விரும்புவதாக” கூறினார். இது வைரலாகப் பரவி, பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் அதன் பின்னர் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கும் விதமாக “சினிமாவை நேசிப்பதாகவும், அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும்” மகேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் “தான் பணிபுரிந்து வரும் தெலுங்கு சினிமாவிலேயே தொடர்ந்து பணியாற்ற வசதியாக இருப்பதாகவும், தெலுங்கு சினிமா முன்னேறுவது தொடர்பான தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.

ராஜமௌலி படம் பற்றி ...

RRR படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அந்த படம் பற்றி பேசிய மகேஷ் பாபு “எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் தனது அடுத்த படம் PAN இந்தியா திரைப்படமாக இருக்கும்” என்றும் மகேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் மகேஷ் பாபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

SVP FROM MAY12: “நானும் ராஜமௌலியும் சேரும் படம்… ”… மகேஷ் பாபு கொடுத்த செம்ம EXCITING தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh babu hinted about his collabation with Rajamouli

People looking for online information on சர்காரு வாரி பாட்டா, மகேஷ் பாபு, Keerthhy Suresh, Mahesh Babu, Rajamouli, SVP FROM MAY12 will find this news story useful.