மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு திடீர் மரணம்.. சோகத்தில் தெலுங்கு திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்: நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மூத்த மகனுமான கட்டமனேனி ரமேஷ் பாபு, உடல்நலக் கோளாறுகளால் சனிக்கிழமை மாலை காலமானார். 

Advertising
>
Advertising

கடந்த சில வாரங்களாக ரமேஷ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை கச்சிபௌலி ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றினர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவருக்கு வயது 56. 

இந்த சோகமான செய்திக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி, “திரு.ஜி.ரமேஷ் பாபுவின் மறைவு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. ஸ்ரீ.கிருஷ்ணா , மகேஷ்பாபு  குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரமான இழப்பைச் சமாளிக்கும் சக்தியை அந்த குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் தருவானாக". என டிவீட் செய்துள்ளார்.

நடிகர் ரமேஷ் பாபு 1974ல் ‘அள்ளூரி சீதாராமராஜு’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர், அவர் பல்வேறு தெலுங்கு படங்களில் கிருஷ்ணா மற்றும் மகேஷ் பாபு இருவருடனும் இணைந்து நடித்தார். 'நா இல்லே நா ஸ்வர்கம்', 'அண்ணா செல்லு', 'பச்ச தோரணம்', 'முக்குறு கொடுகுலு', 'சாம்ராட்', 'சினி கிருஷ்ணுடு', 'கிருஷ்ணா காரி அப்பா', 'பஜார் ரவுடி', 'கலியுக கரணுடு', 'கருப்புலி' ', 'ஆயுதம்', 'கலியுக அபிமன்யுடு' ஆகியவை தெலுங்கில் அவரது முக்கியப் படங்கள். தெலுங்கு சினிமாவில் கடைசியாக ரமேஷ் பாபு ‘என்கவுன்டர்’ படத்தில் நடித்தார், 1997 முதல் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், 2004 இல் தயாரிப்பாளராக மாறினார் மகேஷ் பாபு நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர்களாக மாறிய ‘அர்ஜுன்’ மற்றும் ‘அதிதி’ போன்ற படங்களை தனது தம்பிக்காக தயாரித்தார். 

முன்னதாக, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கடந்த வியாழன் அன்று (ஜனவரி 6) கோவிட்-19 தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Brother Actor Ramesh Babu Passed Away

People looking for online information on Mahesh Babu, Ramesh babu, RIP, Telugu Cinema will find this news story useful.