தெலுங்கு சினிமாவில் மோதலுக்கு தயாராகும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு & 'பாகுபலி' பிரபாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் மகேஷ்பாபுவும், பிரபாசும். இவர்கள் இருவரும் நடிக்கும் படங்கள் தெலுங்கு சினிமா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

mahesh babu and prabhas ready to clash for festival

இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் `சர்காரு வாரி பாட்டா' படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

mahesh babu and prabhas ready to clash for festival

'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை அடுத்தாண்டு (2022) மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை நேற்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதில் "சர்காரு வாரி பாட்டா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh babu and prabhas ready to clash for festival

People looking for online information on Mahesh Babu, Prabhas will find this news story useful.