கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார்.
பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் தான் கர்ப்பம் ஆனார். அத்துடன் தமது கர்ப்பமான மற்றும் வளைகாப்பு புகைப்படங்களையும் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தான் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதியின் வாழ்வில் அடுத்த கட்ட நல்ல விஷயமாக இந்த தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து சந்தோஷத்தில் அழும் இந்த தம்பதியரின் புகைப்படத்துடன் தமது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள மகத், அதில், கடவுள் அருளால் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தானும் தன் மனைவி பிராய்ச்சியும் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்ததுடன் தங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு அப்பாவாக மாறியதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த போஸ்டுடன் அவர் பகிர்ந்த அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மகத் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்ததுடன் மங்காத்தா, பில்லா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் - 2ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.