"எல்லா LOCK-ம் அபிஷேக்குக்கு தான் இருக்கு".. VJ மகேஸ்வரி உடனான காட்சி குறித்து மஹத்😍..KADHAL CONDITIONS APPLY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! Exclusive

மஹத்,  சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி,  பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படக்குழுவினர், பிஹைண்ட்வுஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது இந்த படத்தில் முத்தக்காட்சி ஒன்று இருப்பதாக ரவீந்தர் குறிப்பிட, அப்போது இப்படத்தின் நாயகன் மஹத், ஆமாம், எல்லா லாக்கும் அபிஷேக்கிற்கு தான் இருக்கிறது என கமெண்ட் அடித்தார். ஆனால் அபிஷேக், “சொல்வது ஈஸிதான். ஆனால் அத்தனை பேர் முன்னிலையில் செட்டில் அதை செய்ய வேண்டும். நான் தயங்கினேன், ஆனால் விஜே மகேஸ்வரி மிகவும் ப்ரொஃபஷனலாக நடிப்பு தானே என கூறினார், அப்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது.” என தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட இந்த காட்சி, கதையில் நாயகனை எமோஷனலாக புரியவைக்க , கதையின் சூழலில் தேவைப்பட்டதாகவும் படக்குழுவினர் இந்த பேட்டியில் தெரிவித்தனர். அபிஷேக், மஹத், விஜே மகேஸ்வரி அனைவருமே பிக்பாஸ் போட்டியாளர்கள் என்பதும் இவர்களுள் மகேஸ்வரி கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்.. வெளியான அடுத்த அப்டேட்..!

"எல்லா LOCK-ம் அபிஷேக்குக்கு தான் இருக்கு".. VJ மகேஸ்வரி உடனான காட்சி குறித்து மஹத்😍..KADHAL CONDITIONS APPLY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mahat Bigg Boss Abhishek VJ Maheswari scenes kadhal conditions apply

People looking for online information on Behindwoods, Kadhal conditions apply, Libra, Mahat, Ravindar Chandrashekhar will find this news story useful.