"RRR மாதிரி, அஜித், விஜய் சேர்ந்து".. பிரபல நடிகர் சொன்ன பதில்.. கேக்கவே செமையா இருக்கே!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahanadhi Shankar about ajith and vijay together act in movie
Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் டிசம்பர் 24-ல் சென்னையில் நடைபெறுகிறது.

Mahanadhi Shankar about ajith and vijay together act in movie

அதே போல மற்றொரு முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆவதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், Behindwoods TV சேனலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதில், பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோர் குறித்து பல சுவாரஸ்ய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதில் பெசன்ட் ரவி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குறித்து பேசிக் கொள்வது பற்றியும், அவர்களுடனான ஷூட்டிங் அனுபவங்கள் குறித்தும் நிறைய தகவல்களையும் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசி இருந்தனர்.

அப்போது, விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பப்பட இதற்கு பதில் சொன்ன மகாநதி சங்கர், "பாலிவுட்ல நிறைய ஹீரோஸ் சேர்ந்து நடிக்குறாங்க. RRR-ல ரெண்டு ஹீரோஸ் சேர்ந்து நடிச்ச மாதிரி ரெண்டு பேருக்கும் சமமான கதாபத்திரத்துடன் ஏற்று நடிக்கலாம்" என மகாநதி ஷங்கர் கூறினார். வில்லன் - ஹீரோ போல இணைந்து அவர்கள் நடிப்பது என்பது நடக்காது என்றும் இரண்டு பேர் சேர்ந்து நாட்டை காப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்றும் பெசன்ட் ரவி கூறினார்.

அந்த சமயத்தில், ரசிகர் ஒருவர் விஜய் திரைப்படம் ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் சேர்ந்து நடிக்கலாம் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"RRR மாதிரி, அஜித், விஜய் சேர்ந்து".. பிரபல நடிகர் சொன்ன பதில்.. கேக்கவே செமையா இருக்கே!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mahanadhi Shankar about ajith and vijay together act in movie

People looking for online information on Ajith Kumar, Thalapathy Vijay, Thunivu, Varisu, Varisu Audio launch, Vijay will find this news story useful.