அஜித் தந்தை மறைவு.. இறுதி அஞ்சலி செலுத்திய A.R. முருகதாஸ், மகிழ் திருமேனி, AL விஜய்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியமின் இறுதி சடங்கில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் அஜித் தந்தையின் இறுதி ஊர்வலம்.. மலர் மாலை மற்றும் தென்னை ஓலை வைத்து அஞ்சலி.. வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார். 

அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா, அருண் விஜய் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.  பின்னர் உடலானது தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக நடிகர் அஜித் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஏ. எல். விஜய், மகிழ் திருமேனி, லைகா தமிழ் குமரன், பார்த்திபன், நடிகர் பிரசன்னா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | இறுதிச் சடங்கில் தந்தையின் உடலை சோகத்துடன் தாங்கி வந்த அஜித்.. உருக்கமான வீடியோ!

அஜித் தந்தை மறைவு.. இறுதி அஞ்சலி செலுத்திய A.R. முருகதாஸ், மகிழ் திருமேனி, AL விஜய்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Magizh Thirumeni AR Murugadoss AL Vijay in AK father funeral

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Father PS Mani Funeral, AK father funeral, AL Vijay, AR Murugadoss, Magizh Thirumeni will find this news story useful.