COBRA TRAILER: அடடே.. விக்ரம் நடிக்கும் கோப்ரா.. டிரெய்லர்ல மதுரை முத்துவ கவனிச்சீங்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

Madurai Muthu Spotted in Vikram Starring Cobra Trailer
Advertising
>
Advertising

Also Read | Cobra Trailer: விக்ரம் செய்த செயல்.. விழா மேடையிலே நெகிழ்ந்து போன தொகுப்பாளினி.!

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

Madurai Muthu Spotted in Vikram Starring Cobra Trailer

இந்த டிரெய்லர் படி, ஏழு வித்தியாசமான கெட் அப்-களில் சியான் விக்ரம் இந்த தோன்றியுள்ளார். கணித ஆசிரியராக விக்ரமின் ஒரு கதாபாத்திரம் டிரெய்லரில்  காண்பிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன், சேஸிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த டிரெய்லர் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் மற்றும் எண்டர்டெயினர் மதுரை முத்து இடம் பெற்றிருக்கிறார்.,

தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான ரியாலிட்டி நகைச்சுவையாளராக பரவலாக அறியப்படும் மதுரை முத்து விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். அதற்கு முன்னதாக சன் டிவி அசத்தப்போவது யாரு என சின்னத்திரைகளில் ரியாலிட்டி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். உலகெங்கும் தமிழில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றங்களை நடத்தி புகழ் பெற்றவர்.

இந்நிலையில் மதுரை முத்து கோப்ரா டிரெய்லரில் இடம் பெற்றுள்ளதும், படத்தில் நடித்திருப்பதும் அவருடைய ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. இர்ஃபான் பதான் பகிர்ந்த வைரல் BTS போட்டோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Madurai Muthu Spotted in Vikram Starring Cobra Trailer

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra Trailer, CobraFromAug31, Vikram will find this news story useful.