"2010-ல டிவி நிகழ்ச்சிகளை கோவை குணா நிறுத்திக்கொண்டார்.. காரணம் இதுதான்" - மதுரை முத்து உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக மக்களிடையே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழடைந்தவர் கோவை குணா. ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "சரியான வழியில போயிருந்தா அவர் இன்னொரு சந்திரபாபு..".. கோவை குணா மரணம்.. மதன் பாப் உருக்கம்

இதனை தொடர்ந்து குணா ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்திருந்தார். ஸ்டான்ட் அப் காமெடியாக இருந்தாலும் சரி, மிமிக்ரியாக இருந்தாலும் சரி குணா சில வினாடிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவர். கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி பல்லாயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக பெற்றவர். இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் குணா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் குறித்து மதுரை முத்து பிஹைண்ட்வுட்ஸில் பிரத்தியேகமாக பேசியுள்ளார். மதுரை முத்துவும் கோவை குணா போலவே ஆரம்பத்தில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பெர்ஃபார்ம் பண்ணியவர். அந்த வகையில் தமது சக கலைஞரின் மறைவு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் பேசிய மதுரை முத்து, “கோவை குணா பற்றி இன்று இருக்கும் பலரும் அறியமாட்டார்கள். இன்று பலகுரலில் பேசும் பலருக்கும் அவர் முன்மாதிரியானவர். இன்றைய வெற்றியாளர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டபோது கோவை குணா தாங்கிப் பிடித்தார்.

அவர் தன்னை செலிபிரிட்டி என எப்போதுமே நினைத்ததில்லை. ஆனால் மிகப்பெரிய திறமைசாலி அவர். அவரை நான் பார்த்து பார்த்து வியந்துள்ளேன். எத்தனையோ பேர் பெர்ஃபார்ம் பண்ணினாலும், அவரை மாதிரி வராது என சொல்லியிருக்கிறேன். ஒரு ஆளை பார்த்தால் அப்படியே அப்ஸர்வ் பண்ணி இமிடேட் பண்ணுவார். இப்போதுள்ள தலைமுறை அவரை அறிந்திருக்க வேண்டும். அவர் 2010-ஆம் ஆண்டிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் பண்ணுவதை நிறைவு செய்துவிட்டார். கோவையில் இருந்ததால் சென்னை - கோவை தூரம் காரணமாக அடிக்கடி சென்னை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.

இயக்குநர் சரண் சார், லிங்கு சாமி சார், பாலாஜி சக்திவேல் சார் எல்லாம் அவரை வியந்து பாராட்டி அலுவலங்களுக்கு அழைப்பவர்கள். பல இயக்குநர்களுக்கு அவர் பிடிக்கும். தனித்துவமான மற்றும் அரிதான குரல்களில் நேரத்தை சரியாக பயன்படுத்தி பேசுவார். அவர் 10 நிமிடம் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணி முடித்துவிட்டால் அதுக்குள்ள முடிஞ்சிருச்சா என தோன்றவைக்கும்!” என வேதனையுடன் பேசினார்.

Also Read | "கெட்ட பழக்கம் அளவா இருக்கணும்" - ‘அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை குணா மரணம்..! நடிகர் மதன் பாப் வேதனை பேட்டி

தொடர்புடைய இணைப்புகள்

Madurai Muthu about Kovai Guna Talent and Characters

People looking for online information on Madurai Muthu will find this news story useful.