இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் குறித்து மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. இதில் டேனியல், கரிஷ்மா கவுல், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், வரும் தீபாவளிக்கு நேரடியாக தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இரண்டாம் குத்து படத்தின் டீசரை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வித நாகரிகமும் நன்னெறியும் இன்றி, படத்தில் காட்சிகள் உள்ளன எனவும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது எனவும் கடுமையான கண்டனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.