'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரி கிருஷ்ணன். குறிப்பாக மெட்ராஸ் படத்தில் இவர் நடித்த ஜானி என்கிற வேடத்துக்கு மிகப் பெரிய வரவேற்பை கிடைத்தது.

இந்நிலையில் இவர் தற்போது சிறகு என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை பிரபல பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்குகிறார். மாலா மணியன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.
இந்த படத்தில் பயணம் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த படத்துக்கு அரோல் குரோலி இசையமைக்க, ராஜா பட்டச்சார்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் அக்ஷிதா, காளி வெங்கட், நிவாஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயராகியுள்ளது.