அண்மையில் அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.
வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படம் Zee5 தமிழ் ஒடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை Zee5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லா படங்களையும் போல் மார்ச் 25 (வெள்ளி) அன்று வார இறுதியில் வலிமை படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வலிமை பட வழக்கு தொடர்பாக பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. 25.3.2022 அன்று வலிமை படத்தை OTT தளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மெட்ரோ திரைப்பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரால் பதிப்புரிமை மீறலுக்கு முதன்மையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி தடையாணை வழங்க மறுத்து உத்தரவிட்டார். இயக்குனர் எச்.வினோத்துக்காக வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.