நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட காரை இறக்குமதி செய்திருந்தார்.
கார் நுழைவு வரி
ஆனால் அதன் பின்னர் தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, இந்த காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு அங்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த காரின் விலை 2012 மார்க்கெட் நிலவரப்படி 2.25 கோடி ரூபாய் என்றும், எனவே இறக்குமதி வரியானது காரின் ஒரிஜினல் விலையை விட அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
Also Read: ஹன்சிகாவின் 50வது படம்.. கௌரவ தோற்றத்தில் சிம்பு? ரிலீஸ் விஷயத்தில் பரபரப்பு அப்டேட்..!
வரி விலக்கு கோரிக்கை
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து தாம் வாங்கியிருந்த அந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கான இறக்குமதி வரியை விலக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை பின்னர் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக சில உத்தரவுகளை போட்டதுடன், சில கருத்துக்களையும் முன்வைத்தார்.
நீதிமன்றம் அபராதம்
அந்த நடிகர் விஜய் தொடர்ந்த இந்த மனுவை அந்த நேரத்தில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன், வரிவிலக்குக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நடிகர் விஜய்க்கு, இவ்வாறு வரிவிலக்கு கோரி மனு தொடர்ந்ததற்காகவும், வரி தாமதமானதற்காகவும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார்.
தனி நீதிபதி கருத்து..
அப்போது இது தொடர்பான தனி நீதிபதியின் கருத்தில், சமூகத்துக்கு முன்னுதாரணமாக திரைப்படங்களில் திகழும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறே இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார். ஆனால் பின்னர் நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து அவர் செலுத்தவேண்டிய வரியை ஆகஸ்டு மாதமே கட்டிவிட்டதாக குறிப்பிட்ட விஜய் தரப்பு தனிநீதிபதியின் கருத்தை நீக்கவும் கோரியிருந்தது.
தனி நீதிபதி கருத்தை நீக்கும்படி மனு
அதன்படி, தனி நீதிபதியின் இந்த உத்தரவை அடுத்து, நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு பின்னர் நடந்த இந்த விசயத்தில், விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு முதலில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டதாக கூறிய விஜய் தரப்பு, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி முன்வைத்த சில கருத்து பகுதிகளை நீக்கும்படி கோரியுள்ளது.
அந்த கருத்துக்கள் நீக்கம் ரசிகர்கள் நிம்மதி..
இந்நிலையில் தான் இந்த மனு குறித்து பரிசீலித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சஃபீக் அமர்வு இந்த விவகாரத்தில் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய மேற்சொன்ன கருத்து பகுதிகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் நிம்மதி அடைந்து சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.