நீச்சல் போட்டி 'இறுதிச் சுற்றில்' தங்கம் வென்று நடிகர் மாதவன் மகன் அபார சாதனை..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மாதவன். இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகவும் உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

கடந்த ஆண்டில் கூட மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியிருந்த மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில் மாதவன் நடிக்க உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

நடிப்பில் மாதவன் பட்டையை கிளப்பி வரும் அதே வேளையில் அவரது மகனான வேதாந்த், நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவ்வப்போது தனது மகன் நீச்சல் போட்டியில் பதக்கங்களை வெல்வது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் மாதவன் பகிர்ந்து வருவார்.

Images are subject to © copyright to their respective owners

அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 5 ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) போட்டிகளில் வேதாந்த் மாதவன் பதக்கங்களை வென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். எட்டு இடங்களில் நடைபெற்ற 27 வகை விளையாட்டில் மொத்தம் 6,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இருந்தனர். இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி என பல பிரிவுகளில் பதக்கங்கள் வென்றுள்ள மகன் வேதாந்த்தின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவரை பாராட்டி உள்ளார் நடிகர் மாதவன். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை போடுவதுடன் வேதாந்த்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan son vedaant wins gold medals in swimming

People looking for online information on Madhavan, Swimming, Vedaant will find this news story useful.