மாதவன் - நயன்தாரா - சித்தார்த் நடிக்கும் புதிய படம்.. இயக்குனர் இவரா? செம்ம.. வைரல் MOTION POSTER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

Advertising
>
Advertising

அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி, ஆய்த எழுத்து,தம்பி, எவனோ ஒருவன், யாவரும் நலம் என பல திரைப்படங்களில் நடித்த மாதவன் ஒரு லவ்லி பாய் ஹீரோவாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

சில வருடங்கள் தமிழில் பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் மாதவன் பிறகு தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராக்கெட்ரி : நம்பி விளைவு என்கிற திரைப்படத்தை இயக்கிய நடித்து இருந்தார். தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.


இந்நிலையில் நடிகர் மாதவன், நடிகர் சித்தார்த், நடிகை நயன்தாரா நடிப்பில் TEST என்ற தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தினை Y Not Studios சசிகாந்த் இயக்க உள்ளார். இவர் விக்ரம் வேதா, பில்லா 2, காவிய தலைவன் ஆகிய படங்களை தயாரித்தவர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan Siddharth Nayanthara Test Movie Motion Poster

People looking for online information on Madhavan, Nayanthara, Siddharth will find this news story useful.