மாதவன் நடிக்கும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! ரிலீஸ் எப்போ தெரியுமா? அசத்தலான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் (Madhavan R)  கடைசியாக தமிழில் மாறா படத்தில் நடித்திருந்தார். அமேசான் பிரைமில் இந்த ஆண்டு வெளியானது. இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சார்லி' படத்தின் அதிகாரப்ப்பூர்வ ரீமேக் ஆகும். 

இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! (Rocketry - The Nambi Effect) எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார். கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என முடிவு செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் வேளையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் வெளியாகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் இந்த படத்தில் கேமியோவாக நடிக்கின்றனர். நடிகர் மாதவனே இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்குகிறார். மாதவனுடன் இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, ரஜித் கபூர், ஜெகன், ரான் டொனாச்சி, மிஷா கோஷல், பிஜோ தாங்ஜாம்  ஆகியோர் நடிக்கின்றனர்.

Tags : R Madhavan

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan R starring rocketry the nambi effect update

People looking for online information on R Madhavan will find this news story useful.