GV பிரகாஷ் அறிவித்த தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Advertising
>
Advertising

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் மாறன் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் படத்தின் இறுதிக்கட்ட இசை அமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Maaran Update GV Prakash Kumar Announced Latest Update

People looking for online information on Dhanush, Maaran, Malavika Mohanan will find this news story useful.