BREAKING: தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் DIRECT OTT ரிலீஸ் எப்போ? சரவெடி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் நடிக்கும் மாறன் படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட இசை அமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.  படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் தியேட்டர் ரிலீசை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என அவதானிக்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். தனுஷ் நடிப்பில் ஏற்கனவே கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம் படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Maaran movie direct ott release date update from producer

People looking for online information on மாறன், Dhanush, Dhanush Movie, Direct OTT, Disney Plus Hotstar, Maaran, Maaran Release will find this news story useful.