LATEST: மாநாடு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

maanaadu trailer release date announced vera level update

இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

maanaadu trailer release date announced vera level update

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த டிரெய்லருக்கான டப்பிங் பணிகள் ஏற்கனவே  முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என சினிமா ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் காத்து இருந்தனர்.  'மாநாடு' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maanaadu

மற்ற செய்திகள்

Maanaadu trailer release date announced vera level update

People looking for online information on Maanaadu will find this news story useful.