“பார்க்க நினைத்தும் முடியாதவர்களுக்காக”… மாநாடு தயாரிப்பாளரின் படம் ஓடிடியில் ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்த மாநாடு படத்தைத் தயாரித்தன் மூலம் பிரபலம் ஆனவர் சுரேஷ் காமாட்சி.

Advertising
>
Advertising

"வாழ்த்து" சொன்ன தனுஷ்க்கு நன்றி சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட வைரல் பதிவு..

தயாரிப்பாளராக சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி இயக்குனர் சாமி இயக்கிய கங்காரு படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். அதன் பிறகு  இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான அவரின் கடைசி படமான அமைதிப்படை 2 –வைத் தயாரித்தார். இந்த படத்தில் சத்யராஜ், சீமான் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திருப்பம் தந்த மாநாடு

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிம்புவோடு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தெதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றது.

அனைத்துத் தரப்பினருக்கும் வசூலைக் கொடுத்த படமாக அமைந்த மாநாடு திரைப்படத்தை தயாரித்து அதை சிறப்பாக வியாபாரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதையடுத்து இப்போது அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். அதில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகும் படமும், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமும் குறிப்பிடத்தகுந்தவை.

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் மிகமிக அவசரம்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில்  கடந்த 2019 ஆம் வருடம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் மிக மிக அவசரம். இந்த படத்தில் ஸ்ரீ ப்ரியங்கா மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண் காவலர்கள் பொது இடங்களில் அலுவலுக்கு நியமிக்கப்படும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி இருந்தார் சுரேஷ் காமாட்சி. பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் இப்போது ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘பார்க்க நினைத்தும் இயலாமல் போனவர்கள் பலர். அனைவரும் பார்க்கும்  முயற்சியாக,  பல கட்டங்களைக் கடந்து நேற்று  இரவு  12 am மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது படம். பார்த்து ரசித்து உங்கள் பார்வையைப் பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே! நன்றி.. நன்றி... ‘ எனக் கூறியுள்ளார்.

அழகா இருக்குறது ரொம்ப simple… நடிகை திவ்யபாரதியின் கவனம் ஈர்த்த புகைப்படமும் கேப்ஷனும்!

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu producer suresh kamatchi movie released in ott

People looking for online information on Kalyani Priyadarshan, Maanaadu, OTT, Producer, S J Suryah, Silambarasan, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.