இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குநரும் பாடலாசியருமானவர் கங்கை அமரன்.
இவரது மகன்கள் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன். இந்நிலையில் இவர்களது தாயார் மணிமேகலை (வயது 69) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் இந்த இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி நடிகர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி, "அம்மா நமக்கு எவ்வளவு பலம். பல நேரங்களில் அப்பாவுக்கும் நமக்கும் பாலம். உங்களுக்கு அம்மா எவ்வளவு பலம் என்பதறிவேன்.
உணர்வால் அம்மாவோடு மிகவும் பிணைக்கப்பட்டவர் என்பதை கடந்த ஒருவாரமாகப் பார்த்து வருகிறேன். எப்படியாவது மீண்டு மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன்." என்று தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான்! - இதுதான் காரணம்.