நான்கு மொழிகளில் முக்கிய பிரபலங்கள் வெளியிடும் 'மாநாடு' படத்தின் டிரெய்லர்! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. சிம்புவை வைத்து இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. (STR) சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2 ஆம் நாள் காலை 11.25 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை இயக்குனர் ஏ. ஆர். முருகதாசும், மலையாள டிரெய்லரை நடிகர் நிவின் பாலியும், தெலுங்கு டிரெய்லரை நடிகர் நானியும், கன்னடத்தில் ரக்ஷித் செட்டியும் வெளியிடுகின்றனர். 

இந்த டிரெய்லருக்கான டப்பிங் பணிகள் ஏற்கனவே  முழுவீச்சில் நடந்து முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu movie trailer releasing in four languages

People looking for online information on Maanaadu, Silambarasan TR will find this news story useful.