போடு வெடிய!.. சிம்புவின் மாநாடு .. சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

Maanaadu Movie satellite rights bagged by Popular Tv
Advertising
>
Advertising

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.

Maanaadu Movie satellite rights bagged by Popular Tv

இதனிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு திரைப்படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் பதிவிட்டிருந்தார். அவ்வாறு தயாரிப்பாளர் ட்வீட் பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே மாநாடு திரைப்படம்  ரிலீஸ் ஆவதற்கு இருக்கும் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்பட, பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகின.

இதனை அடுத்து சிறிது நேரத்தில், ‘மாநாடு’ பட இயக்குநர் வெங்கட் பிரபு தமது ட்விட்டரில், ‘கடவுள் இருக்கார் குமாரு’ என ட்வீட் பதிவிட்டார். இதனால் மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதிப்படுத்தப்பட்டதை உணர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu Movie satellite rights bagged by Popular Tv

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Suresh Kamatchi, V House Productions, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.