இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.
இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் லூப் பாணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது.
சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் வரும் நவம்பர் 25 ஆம் நாள் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கபடும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.