"இன்னொரு குடும்ப பாட்டு!".. சிம்புவின் மாநாடு ... எதிர்பார்ப்பை கூட்டும் முதல் சிங்கிள் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்த மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் அதிரடியாக வெளியாகியுள்ளது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘மாநாடு’ படத்தில் முஸ்லிம் இளைஞனாக நடிக்கும் சிம்புவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிள் டீசர் வெளியாகியுள்ளது. அந்த டீசரில் யுவன் மற்றும் பவதாரணி தோன்றுகின்றனர்.

அவர்கள் தான் மாநாடு படத்தின் அர்த்தம் நிறைந்த முதல் பாடலை பாடுவதாகவும், மதன் கார்க்கி இந்த பாடலை ஆழமான அர்த்தங்களுடன் எழுதியுள்ளதாகவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டதுடன், இது எங்கள் இன்னொரு குடும்ப பாட்டு என சொல்கிறார்.

மெஹரிஜில்லா என பெயரிடப்பட்டுள்ள மாநாடு படத்தின் இந்த முதல் சிங்கிள் பாடலுக்கான டீசரை யுவன் சங்கர் ராஜா தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசருக்கான முழு பாடல் ஜுன் 21 அன்று (திங்கள் கிழமை)  வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த படத்தின் டப்பிங் பேசுவதற்கு நடிகர் சிம்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ: “மாணவர்கள் 50 பைசாவில் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!”.. நீட் தொடர்பாக தங்கர் பச்சான்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu first single teaser simbu yuvan shankar raja trending

People looking for online information on Kalyani Priyadarshan, Maanaadu, Premgi Amaren, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, V House Productions, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.