கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, மதுரை, கோவை ( ஏப்ரல் 26 - ஏப்ரல் 29) ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரும்பாலான கடைகள் இயங்காது என்பதால் நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் முன்பு மக்கள் கூட்டமாக வருகின்றனராம். இந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''ஏன் திடீர் பீதி சென்னை ?. நான்கு நாட்கள் கடும் லாக்டவுனுக்கு ஸ்டாக் ஓட சேர்த்து வைரஸையும் வாங்கிட்டு வந்துருவாங்க போல இருக்கே. 4 நாளும் பிரியாணி சமைக்க போறாங்களோ. பொறுமையாக இருங்கள். இதுவும் கடந்து போகும்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர் ஒருவருக்கு ''வெறும் ரசம் சோறு போதும் புரோ'' என்று கமெண்ட் செய்துள்ளார்.