சிம்புவின் தங்கை வெளியிட்ட புகைப்படம் செம வைரல்.! - மாமாவும் மாப்ள-யும் ஜாலி கொண்டாட்டம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே நடித்து, தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் ஹன்சிகா நடிக்கும் மகா படத்திலும் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கையான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்'' என பதிவிட்டுள்ளார். சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சிம்புவின் தங்கை வெளியிட்ட சூப்பர் புகைப்படம் | Maanaadu Actor Simbu's Sister Elakkiya Shares his Throwback Photo

People looking for online information on Maanaadu, Simbu, Simbu Sister Elakkiya, Str will find this news story useful.