சென்னை: மாரி செல்வராஜ் - வடிவேலு & உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
![Maamannan song shooting starts yesterday in salem Maamannan song shooting starts yesterday in salem](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/maamannan-song-shooting-starts-yesterday-in-salem-new-home-mob-index.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன், கோப்ரா, இரவின் நிழல், அயலான், மலையன்குஞ்சு, பத்து தல, வெந்து தணிந்தது காடு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. குருவி, மன்மதன் அன்பு, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி சமீபத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் நேற்று துவங்கி உள்ளது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/